சா.நடனசபேசன்
சம்மாந்துறை கல்விவலயத்தின் ஆசிரிய ஆலோசகர் சாமித்தம்பி மோகன் அவர்கள் தனது 33 வருட கல்விச்சேவையில் இருந்து 31.07.2025 ஆம் திகதி ஓய்வுபெற்றுள்ளார்
இவரை வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் கே.தியாகராசா தலைமையில் இடம்பெற்றது
இவர் 15 ஆம் கிராமத்தினைப்பிறப்பிடமாகக்கொண்டதுடன் ஆரம்பக்கல்வியினை நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் கற்றார். பயிற்றப்பட்ட விவசாயப்பாட ஆசிரியராக முதல் நியமனத்தினை 15 ஆம் கிராமம் மகாவித்தியாலயத்தில் பெற்று ராணமடு இந்துக்கல்லூரி வேப்பையடித்தோட்டம் வாணி மகா வித்தியாலயம் வீரத்திடல் அல்சிறாஷ் மகாவித்தியாலயத்தில் பணியாற்றிய பின்னர் 2001.10.06 ஆம் திகதி ஆசிரிய ஆலோசகராக பதவி உயர்வுபெற்று சம்மாந்துறை கல்விவலயத்தில் கடமையாற்றினார்.
இவர் வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தின் வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தராகக் கடமையாற்றியதுடன் இவர் கல்விமானி பட்டதாரியாக இருப்பதுடன் நாவிதன்வெளி சுற்றாடல் படையணியின் ஆணையாளராகவும் கடமையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.














Post A Comment:
0 comments so far,add yours