( வி.ரி.சகாதேவராஜா)
பாதயாத்திரை செல்வோருக்கு தாகத்திற்கு தண்ணீர் வழங்கி வரலாற்று தடம் பதிக்கும் அமைப்பாக தடம் அறக்கட்டளை திகழ்கிறது.
அது
மட்டுமல்ல ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்தால் அங்கு தேவையான குடிநீர்
வசதியுடன் 5 ஆயிரம் ரூபா பணமும் அன்றே அன்பளிப்பு செய்தும் வருகிறது.
அண்மையில் தாந்தா முருகன் ஆலய பாத யாத்திரை மேற்கொண்ட அடியவர்களுக்கு தண்ணீர்ப் போத்தல்கள் வழங்கி வைத்தனர்.
பெரியகல்லாற்றை
சேர்ந்த அவுஸ்திரேலியா வாழ் பரோபகாரி ரி. நிரஞ்சன் தனது தாயின் நினைவாக "
தடம் " அறக்கட்டளை எனும் அமைப்பை உருவாக்கி அதன் ஊடாக பல சமூக சேவையினை
செய்து வருகின்றார்.
தாந்தாமலை சிறி முருகன் ஆலயம் நோக்கி பாதபாத்திரை வந்த பத்தர்களுக்கு 5 ஆயிரம் தண்ணீர் போத்தல்கள் விநியோகம் செய்தார் .
மரணம்
ஏற்படும் வீடுகளுக்கு போதியளவு குடிநீர் , உதவிகள், பண தொகை 5000/=
அத்தோடு கொட்டகைகள் , கதிரைகளையும் போன்றவற்றையும் இலவசமாக நீண்ட காலமாக
தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார.




Post A Comment:
0 comments so far,add yours