துறைநீலாவணை லயன் ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிறிக்கட்மென்பந்துச் சுற்றுப்போட்டியும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை அதன் தலைவர் அ.துசாந் தலைமையில் துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கடந்த இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டிக்கு மட்டு அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த 48 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றின இதில் மண்டூர் அருள்மணி விளையாட்டுக்கழகம் முதலாமிடத்தினையும் செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக்கழகம் இரண்டாமிடத்தினையும்பெற்றது
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் மண்முனைதென்எருவில் பற்றுப்பிரதேசசபைத்தவிசாளர் எம்.வினோராஜ் பிரதித்தவிசாளர் அ.வசிகரன் பிரதேசசபை உறுப்பினர் சு.இளமாறன் துறைநீலாவணை தமிழரசுக்கட்சி வட்டாரக்கிளைத்தலைவர் த.கணேசமூர்த்தி துறைநீலாவணை மகாவித்தியாலய அதிபர் எஸ்.கிருபைராசா மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்


















Post A Comment:
0 comments so far,add yours