(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பொறுகாமாம் தொடக்கம் கோவில் போரதீவு வரையான  பிரதான வீதி  ,மற்றும் உள் வீதி ஓரங்களில் வீசப்பட்ட உக்கக்கூடிய,மற்றும் உக்காத கண்ணாடி போத்தல்கள், பிளாஸ்டிக் பொருட்களை துப்பரவு செய்யும் பணிகள் இன்று( 24.08.2025)காலை முன்னெடுக்கப்பட்டன.

போரதீவு பற்று பிரதேச தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் திட்டமிடலுடன்,  லண்டனில் பிரபல தொழிலதிபராக திகழ்ந்து கொண்டு இருக்கும் சமூக சேவையாளர் மார்க்கண்டு நேசராசா அவர்களின் நேரடி பங்களிப்புடன் போரதீவு பற்று பிரதேச சபை உறுப்பினர் மகேஸ்பரம் கோபிநாத் அவர்களின் ஏற்பாட்டில் பொறுகாமம் தொடக்கம் கோவில் போரதீவு வரையிலான வீதியின் இரு மருங்கிலும் மற்றும் மீனாட்சிக்கட்டு பிள்ளையார் ஆலய வெளிப்புற எல்லைப்புற குளத்தின் இரு மருங்கிலும் மாபெரும் சிரமதான பணி நடைபெற்றது.

இன் நிகழ்வில் கோவில் போரதீவு கிராம பொதுமக்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் மற்றும் ஆலய அறங்காவலர் சபையினர் விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் கமநல அமைப்பின் நிருவாகிகள், விவசாயிகள், போரதீவு பற்று பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.










Share To:

Post A Comment:

0 comments so far,add yours