(எஸ்.அஷ்ரப்கான்)
ஒலுவில், அல் - ஹம்றா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் எஸ்.ஹாஸீக் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக தெரிவானார்.
இவரை
பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை ஆசிரியர் நலனோம்பல் குழுவின்
ஏற்பாட்டில் ஒலுவில் அல் - ஹம்றா மகா வித்தியாலயத்தில் அதிபர் அஷ்ஷெய்க்
யூ.கே.அப்துர் ரஹீம் தலைமையில் (25) இடம்பெற்றது.
இப்பாராட்டு நிகழ்வில் சம்சுதீன் ஹாசீக் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசில் வழங்கி பாடசாலை சமூகத்தால் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில்,
பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அதிகாரி எம்.எச்.எம்.றஸ்மி
கலந்துகொண்டார். விசேட பேச்சாளராக ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக
பேராசிரியர் எஸ்.எம். ஐயூப் மற்றும் பிரதி அதிபர்களான ஏ.கமருன் நிஷா,
ஜே.வஹாப்தீன்,
உதவி அதிபர் எம்.எச்.எம்.நசீம் உட்பட
ஆசிரியர்களும்
பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க
உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும்
பாராட்டையும் தெரிவித்தனர்.
சம்சுதீன் ஹாசீக்
தனது
ஆரம்பகால பாடசாலை கல்வியை உயர் கல்விவரை ஒலுவில் அக்/அல்-ஹம்றா மகா
வித்தியாலயத்தில் கற்று பின், பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமானி
பட்டத்தினை பெற்றார்.
இவர்
2014 ஆண்டு சப்ரகமுவ மாகாணத்தின் தெஹியோவிட்ட கல்வி வலையத்திற்குட்பட்ட
கே/தெஹி/ தல்துவ முஸ்லிம் மகாவித்தியாலையத்தில் தமிழ்பாட ஆசிரியராக
கடமையினை பொறுப்பேற்று சுமார் ஐந்து வருட காலம் அப்படசாலையில்
கடமையாற்றினார்.
அத்தோடு,
தனது ஆசிரியர் வாண்மையினை விருத்தி செய்ய தேசிய கல்வி நிறுவகத்தில் (NIE)
PGDE கற்கையை பூர்த்தி செய்து பின் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் (BEd)
கல்வி முதுமாணி பட்டத்தினையும் பெற்று ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயமான
தான் படித்த பாடசாலையிலேயே கல்வி கற்பித்து அண்மையில் இலங்கை ஆசிரியர்
கல்வியலாளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 02.06.2025 அன்று இதனுடைய
நியமனத்தையும் பெற்றார்.
அதனை
தொடர்ந்து நடைபெற்ற கல்வி நிர்வாக சேவை பரீட்சையிலும் நேர்முகத்
தேர்விலும் சித்தியடைந்த இவர் எதிர்வருகின்ற 2025.09.01ம் திகதி அன்று
கல்வி அமைச்சினால் வழங்கப்படவுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை நியமனத்தையும்
பெற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Post A Comment:
0 comments so far,add yours