( வி.ரி. சகாதேவராஜா)
மண்முனை
தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன்
இணைந்து நடாத்தும் "உலகை அறிவோம் - விவாத மேடை" நிகழ்வானது இன்றைய
தினம்(27.08.2025) புதன்கிழமை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின்
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில்
இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் த
சி.
உருத்திரராஜா மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த விவாத
நிகழ்வில் "இலங்கையின் கலாசாரம் ஏற்புடையது மற்றும் ஏற்புடையதல்ல "
எனும் தலைப்பில் மாணவர்கள் தங்கள் வாதங்களை மிகவும் சிறப்பான முறையில்
முன்வைத்திருந்தனர். இவ் விவாத நிகழ்வானது மண்முனை தென் எருவில்பற்று
பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 5 பாடசாலைகளில்
முன்னெடுக்கப்படவுள்ளது.
கலாசார
அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரெண்டு மாத விளக்கு வேலைத்திட்டத்தின்
கீழ் இடம்பெறும் இவ் விவாத நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.
சத்யகெளரி தரணிதரன், உதவி அதிபர் திருமதி சு. புவிச்சந்திரன், ஆசிரியர்கள்,
அலுவலக உத்தியோகத்தர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






Post A Comment:
0 comments so far,add yours