அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைபடைத்த வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய மாணவர்களையும் கற்பித்த ஆசிரியரையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வேப்பையடி உதயாவிளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மருதமுனை இலங்கை வங்கி முகாமையாளர் கு.சசிதரன் தலைமையில் திங்கட்கிழமை இடம்பெற்றது.

 வெட்டுப் புள்ளிக்குமேல் சித்தியடைந்த பி.லைஷ்ணமி-138 அ.அகர்ஷனா -162 ஜெ.அஸ்மிதா-145 சி.அபிஷயா-144 க.சபினயா-133 ச.லதுஸ்ரிகா-141 து.அக்சயா-137 ஆகிய மாணவர்களோடு பரீட்சைக்குத்தோற்றிய அனைத்துமாணவர்களையும் கற்பித்த ஆசிரியர் சா.நடனசபேசன் அவர்களையும் கௌரவித்தனர்.

இக்கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலையின் அதிபர் க.தியாகராஜா மற்றும் வேப்பையடி செல்வவிநாயகர் ஆலயத்தின் நிருவாகத்தினர் அன்னமலை 2 கிராமஅபிவிருத்திச்சங்கத்தினர் உதயா விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர் அதேவேளை மாணவர்களுக்குக் கேக் வெட்டி கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours