சமூக நலன்புரி  (swo )நிறுவனத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற கிரான்குளம் விவேகானந்த பூங்காவில் சிறுவர்களின் மகிழ்ச்சிக்காக புகைவண்டி மற்றும் படகு சவாரி உள்ளிட்ட புதிய வசதிகளுடன் இன்று(19.09.2025)ஆம் திகதி சிறுவர் விளையாட்டுப் பகுதி திறந்துவைக்கப்பட்டது.


அமைப்பின் தலைவர் திருமதி தயனி கிருஷ்ணாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி தெட்சண கெளரி தினேஷ் அவர்கள், மண்முனைப் பற்று பிரதேச சபை செயலாளர் திருமதி ரோகினி விக்னேஸ்வரன் அவர்கள் மற்றும் சென் பிரான்சிஸ் அசிசீ இல்ல அருட்.சகோ. விதுஷன் அவர்கள் முதன்மை அதிதிகளாக கலந்து  கொண்டமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இந் நிகழ்வில் அதிதிகளாக அரச உத்தியோகத்தர்கள்,  விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர், அதிபர், பயிற்றுநர்கள், திலகவதியார் மகளிர் இல்ல முகாமையாளர், நிறுவனத்தின் உத்தியோஸ்தர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அசிசீ பாலர் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







Share To:

Post A Comment:

0 comments so far,add yours