மண்டூர் பிரதேசத்தில் சேவையாற்றிய மூன்று வைத்தியப் பெருந்தகைகளுக்கு பாராட்டு விழா.


( ஆ.நிதாகரன்) மண்டூர் பிரதேச வைத்தியசாலைக்கு அளப்பெரும் சேவையாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த வைத்தியர்களான டாக்டர்.பெரியதம்பி சிறிதரன், டாக்டர்.வினாசித்தம்பி சுஜிதரன் மற்றும் டாக்டர். எஸ்.ஏ.டிலினி பிரியங்கிகா பெரேரா ஆகியோர் 29.08.2025 அன்று மண்டூர் முருகன் உற்சவ சந்நிதியில் கௌரவிக்கப்பட்டார்கள். இக்கௌரவிப்பு நிகழ்வினை மண்டூர் பிரதேசத்தினைச் சேர்ந்த அனைத்து கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர். 

இவ்வைத்தியர்கள் மண்டூர் பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக பிரதேச மக்களின் நலனினை கவனத்திற்கொண்டு மிகவும் சிறந்த முறையில் மருத்துவசேவையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 "மக்கட்தொண்டே மகேசன் சேவை"








Share To:

Post A Comment:

0 comments so far,add yours