இ.சுதாகரன்
பட்டிருப்பு கல்வி வலயத்தின் அனுபவமும் திறமையும் மிக்க சிரேஸ்ட அதிபரான மதிப்பிற்குரிய வைரமுத்து பேரின்பநாயகம் அவர்கள் இன்று மட்//பட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் அதிபராக தமது கடமைகளை பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்வி பணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு.s. சிறிதரன் ஐயா அவர்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
துறைநீலாவனை மண்ணை சேர்ந்த இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான இளமானி(B.Sc) பட்டதாரியான இவர் தனது பட்டப்படிப்பின் பின் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகவல் தொழிநுட்ப பிரிவின் உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அதன் பின் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்ட இவர் சிறப்பு தேர்ச்சி பெற்ற கணித பாட பிரபல ஆசிரியராகவும் அதன் பின்னர் அதிபர் சேவையில் உள்வாங்கப்பட்டு தற்போது பட்டிருப்பு கல்வி வலயத்தின் அனுபவம் மிக்க சிரேஸ்ட அதிபராவதுடன் இவர் PGDE,PGDM ஆகிய டிப்ளோமாக்களை பூர்த்தி செய்திருப்பதுடன் கல்வி முதுமானி (M.Ed) பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார். கடந்த 16 வருடத்திற்கும் மேலாக அதிபர் சேவை அனுபவத்தை கொண்ட இவர் அண்மையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மட்ஃ//பட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் அதிபராக நியமிக்கப்பட்டு இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

Post A Comment:
0 comments so far,add yours