சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் ஏற்பாட்டில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குஞ்சன்கற்குளம் பழங்குடி கிராமத்தில் இயங்கிவரும் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அமைப்பின் செயலாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பாசிக்குடா சன்ரே விடுதியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் அமைப்பின் பொருளாளர் எம்.ஹருஸ்ராஜ் உப செயலாளரும் ஊடகவியலாளருமான எஸ்.நடனசபேசன் அமைப்பின் உறுப்பினர் சந்திரலேகன் மற்றும் குஞ்சன்கற்குளம் முன்னாள் கிராம சேவகர் குஞ்சன்கற்குளம் பழங்குடி கிராம தலைவர் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத் தலைவர் சுதர்சன் அவர்களின் பிள்ளைகளான தர்சன் மற்றும் தர்சினி ஆகியோர் அனுசரனை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.






Post A Comment:
0 comments so far,add yours