( வி.ரி.சகாதேவராஜா)
அருட்பிரகாச
வள்ளலாரின் 202 வது அவதார நாளான இன்று (05) ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு
வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மைய ஏற்பாட்டில் விசேட ஆன்மீக
நிகழ்வுகள்
காலை 09 மணி முதல் மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வள்ளலார்
வல்லவர் உள்ளொளி நேசிப்பு நிலையத்தின் ஸ்தாபகர் வல்லவர் தவத்திரு புண்ணிய
மலர் அம்மா தலைமையில் நடைபெற்ற இவ் அவதார தின விழாவில் அருட்பெருஞ்ஜோதி
கீதம், இசைத்தல். அணையா விளக்கு ஜோதிசுடர் எற்றுதல்,தியானம், யோகாசனம்,
வள்ளலாரின் போதனைகள், பல நிகழ்வுகள் நடைபெற்றன.
வள்ளலார்
வல்லவர் உள்ளொளி நேசிப்பு நிலையத்தின் ஆன்மீக இணைப்பாளர் ந.சௌவியதாசன்
ஏற்பாட்டில் ஆன்மீக ஆர்வலர்களான எஸ்.சிசுபாலன், ம.லக்குணம்,
வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அடியார்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





Post A Comment:
0 comments so far,add yours