எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கையின் வடக்கு கடற்கரையில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடக்கு தமிழக கடற்கரையில் வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மாகாணத்தில் பலத்த மழை பெய்யக்கூடும்.
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post A Comment:
0 comments so far,add yours