( வி.ரி.சகாதேவராஜா)
வணக்க ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது நல்லது . கும்பாபிஷேகம் தொடக்கம் திருவிழாக்கள் வரை செய்வது சரி. ஆனால்  மக்களுக்கு தொண்டு செய்வது என்பது அதைவிட நல்லது .
அதுதான் இறை அனுபூதியை பெற வழிவகுக்கும்.

இவ்வாறு இந்தியா மைலாப்பூர் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் சுவாமியும் "இராமகிருஷ்ண விஜயம்"  சஞ்சிகையின் நூலாசிரியருமான ஸ்ரீமத் சுவாமி அபவர்கானந்தா ஜீ மகராஜ்    தெரிவித்தார்.
 
காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் சாரதா நலன்புரி நிலையத்தில் இகிமி. மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ தலைமையில் நேற்று  (21) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற சத் சங்கத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 மட்டக்களப்பு இகிமிசன் உப தலைவர் ஸ்ரீமத் சுவாமி உமாதேஸானந்த ஜி கலந்து கொண்ட இத் சத்சங்கத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில் ..

நம்முள் உள்ள தெய்வீகத்தை வெளிப்படுத்தும் இடமே ஆலயம் .எம்மில் பலர் இறைவனை ஒரே ஏவலாளராக பார்க்கிறோம் .எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே ஆண்டவரிடம் மண்டியிடுகின்றோம். உண்மையில் எல்லா மக்களிடத்திலும் இறைவன் இருக்கிறான் . மக்களுக்கு சேவை செய்கின்றபோது இறைவன் எம்மிடம் வருகின்றான்.
 நாங்கள் எல்லாம் வேலைக்காரனாக இருக்க விரும்புவதில்லை .மாறாக எஜமானனாகவே இருக்க விரும்புகிறோம். இதுதான் அடிப்படை பிரச்சனை.
எனவே ஒற்றுமை படுங்கள் .சேவை செய்யுங்கள் .சமுதாயம் தானாக மாறும் என்றார்.


நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன்   அபிமானிகளான செல்வநாயகம் குருகுலசிங்கம் அருட்ஜோதி ஜெகநாதன் மற்றும் குணசிங்கம் சகாதேவராஜா கந்தசாமி வித்தியாராஜன் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours