பாறுக் ஷிஹான்
பல்லாயிரம் ரூபா பெறுமதியுள்ள தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸார் வங்களாவடி பிரதேசத்தில் திங்கட்கிழமை(29) குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் சம்மாந்துறை விளினியடி 02 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையர் கைதானவர் ஆவார்.
குறித்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
Post A Comment:
0 comments so far,add yours