துறைநீலாவணை நிருபர்

தடம் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பெரியகல்லாற்றினைச் சேர்ந்த சமூகசேவகர் இ.நிறஞ்சன் அவர்களது நிதி உதவி மூலம் துறைநீலாவணை முன்பள்ளி மாணவர்களுக்கு சிறுவர் தினத்தினை முன்னிட்டு  சிறுவர் தினப்பரிசில்கள் ;வழங்கி வைக்கும் நிகழ்வு 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

தடம் அமைப்பின் தலைவர் நிறஞ்சன் அவர்களிடம் துறைநீலாவணை முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்ததன் காரணாமாக இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

சமூக சேவகர் இ.நிறஞ்சன் அவர்கள் தடம் அமைப்பின் ஊடாக தனது பெரிய கல்லாறு கிராமத்திற்கு இச்சேவையினை ஆரம்பித்து இன்று தேசிய ரீதியில் பரந்துபட்டதாக அமைந்துள்ளமையினை கல்விச் சமூகம் பாராட்டி வருகின்றது.

இந்தச் சேவை தொடர்பாக முன்பள்ளி மாணவர்களது பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இ.நிறஞ்சன் அவர்கள் அவுஸ்ரெலியாவில் இருந்தாலும் மண்ணையும் மக்களையும் மறக்காது இவ்வாறான உதவிகளைச் செய்து வருகின்றார்  இவரது சேவையினைப் பாராட்டுவதுடன் பெற்றோர்கள் சார்பாக நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்
















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours