இ.சுதாகரன்


தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு குருமண்வெளி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் ஓவியர் கலாபூசணம் செல்லையா டானியல் அவர்களின் கைவண்ணத்தில் உதயமான ஓவியக்கண்காட்சி குருமண்வெளி பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம்(14) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ் மற்றும்  வட்டார உறுப்பினர் ஆ.பத்மதேவுஇ நூலகர் சீ.ரவி உட்பட கிராமத்திலுள்ள  குருமண்வெளி சிவ சக்தி வித்தியாலயம்இகுருமண்வெளி கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் அதிபர்கள்இ ஆசிரியர்கள் மாணவர்கள்இபொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.ஜெயக்காந்தன்இமற்றும் சீர்பாத தேவி சிறுவர் முன்பள்ளி மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


கண்காட்சி நிகழ்வில் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் புகழ் பெற்ற பல ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours