( வி.ரி. சகாதேவராஜா)

மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன் ஆலயத்தினால் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட சிவன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்தவிளையாட்டு விழாவானது நேற்று முன்தினம் (12) செட்டிபாளையம் மகா வித்தியாலய மைதானத்தில் பாடசாலை அதிபர் க.துரைராசா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின்தவிசாளர்  எம்.எ.அமீர்டீன்கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதியாக செட்டிபாளையம் ம.வி அதிபர்வி.பேரின்பநாயகம் 
கௌரவ அதிதிகளாக. மட்டக்களப்பு  அரசினர் ஆசிரியர் கலாசாலையின் 
விரிவுரையாளர் பி.குபேந்திரராஜா  மற்றும் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக
ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் விரிவுரையாளர் சு.இளங்கீரன் விசேட அதிதியாக. சிவன் ஆலயத்தின் கௌரவ தலைவர் மு.பாலகிருஷ்ணன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்  செ.சக்திநாயகம் மற்றும் ஆலயங்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் சமூக ஆர்வலர்கள்  என பலர் கலந்து  கொண்டனர்.

காண்போரை கவரும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி கண்காட்சி ஆக்கத் திறன் விருத்தியை மையமாகக் கொண்ட போட்டி நிகழ்வுகள் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான சிறப்பு விசேட விளையாட்டுக்கள் முதலானவை சிறப்பாக இடம் பெற்று பரிசளிப்பு விழா விருந்தினர் கௌரவிப்பு அதனைத் தொடர்ந்து செயலாளர்   ம.புவிதரனின் நன்றியுரையுடன் விளையாட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours