(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை புனரமைப்பதற்கு 2 இலட்சம் பெறுமதியான காசோலைகள் இன்று (27) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இதன் இரண்டாம் கட்டமாக அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமது வீடுகளை பூரணப்படுத்துவதற்காக இந்நிதி இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.



Post A Comment:
0 comments so far,add yours