(அஸ்லம் எஸ்.மெளலானா)



அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரான அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி, எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8.30 மணி முதல் மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அதன் செயலாளராகவும் உப தலைவராகவும் செயற்பட்டு வந்த அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி, எம்.ஏ.) அவர்கள் 1998 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 25 வருடங்கள் தலைவராக யற்பட்டு வந்த அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி, எம்.ஏ.) அவர்கள் 1998 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 25 வருடங்கள் தலைவராக செயற்பட்டு, அதன் வளர்ச்சிக்காகவும் சமூக, சன்மார்க்க முன்னேற்றத்திற்காகவும் பெரும் பங்காற்றியமைக்காகவே அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தற்போதைய நிர்வாகம் இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் மதனி தலைமையில் நடைபெறவுள்ள

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜ.எம். றிஸ்வி முப்தி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இதப்போது அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா அவர்களது சமய, சமூக மற்றும் கல்வித் துறைகளில் ஆற்றிய உன்னத சேவைகள் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் மற்றும் வாழ்த்துச் செய்திகள் அடங்கிய சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல். நாஸிர் கனி (ஹாமி, எம்.ஏ) தெரிவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours