வெல்லாவெளி, குருமண்வெளி நிருபர்கள்
புத்தசாசனம்,
மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலில் இந்து சமய கலாசார
அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை அஞ்சல் திணைக்களம் ஆகியவை இணைந்து
நடாத்திய தேசிய தீபாவளி பண்டிகை தினத்திற்கான அஞ்சல் முத்திரை மற்றும்
தபால் உறைக்கான சித்திர போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி
மாணவன் செல்வன் ஜீவராசா லபிக்ஸன் தேசிய தீபாவளி தபால் உறைக்காக தேசிய
மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அண்மையில்
ஹட்டன் நகரில் நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை கொண்டாட்ட நிகழ்வின்போது
புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கெளரவ
கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களினால் இம்மாணவனுக்கான சான்றிதழ் மற்றும் பணப்பரிசு என்பன வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை
கார்மேல் பற்றிமா கல்லூரியில் தரம் 3 இல் கல்வி பயிலும் ஜீவராசா லபிக்ஸன்
சித்திர பாட திறன் அபிவிருத்தி கற்கை நெறியினை முறையாக பூர்த்தி செய்தவர்.
இவர் மெலிபன் பிஸ்கட் கம்பனி நடாத்திய தேசிய மட்ட சித்திர போட்டியிலும்,
இலங்கை மருத்துவ சங்கம் நடாத்திய சித்திர போட்டியிலும் தேசிய மட்டத்தில்
சான்றிதழ் மற்றும் பணப்பரிசினையும் பெற்றுள்ளதோடு, கலாசார மத்திய
நிலையங்களுக்கிடையிலான பிரதீபா சித்திர போட்டியில் மாகாண மட்டத்தில்
சிறப்பு சான்றிதழையும் பெற்றுள்ளார். தொடர்ந்தும் ஆக்கத்திறன் போட்டிகளில்
தேசிய மட்ட சாதனைகளை நிலைநாட்டி
வருகின்றார்.
இம்மாணவனுக்கான
முறையான ஓவியப் பயிற்சி மற்றும் வழிகாட்டல்களை தேசிய கலைஞரும் ஓவிய
ஆசிரியருமான கலைஞர்.ஏ.ஓ.அனல் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours