எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தேசிய
வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீடமைப்பு
திட்டங்களை நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு பிரதி
அமைச்சர் ரி. பி. சரத்தினால் உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கும்
நிகழ்வு நேற்று (02) மண்முனைப் பற்றில் இடம்பெற்றது.
2025ம் ஆண்டில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட 04 வீட்டுத்திட்டங்களில் 3 வீடுகள்
மண்முனைப்
பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு தெற்கு, தாழங்குடா,
இராஜதுரைக் கிராமம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நடைபெற்றது.
இதில்
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு, பிரதேச செயலாளர் தட்சணகௌரி
தினேஷ், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளர், பிரதேச செயலக
பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள்,
பிரிவுக்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி, கிராம மற்றும் பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றினார்கள்.


Post A Comment:
0 comments so far,add yours