(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
"உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் கொண்டாடப்படும் சிறுவர் தின நிகழ்வுகள் சாய்ந்தமருது லீட் த வே முன்பள்ளியிலும் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
சிறுவர்களுக்காக நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகள் உட்பட கலை நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் தங்கள் திறமைகளை சிறந்த முறையில் வெளிக்காட்டி இருந்தனர்.
இறுதியில் சிறுவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நிகழ்வுகள் அனைத்தும் நிறுவனத்தின் பணிப்பாளர் ஐ.எம்.உவைஸ் தலைமையிலும் நிறுவனத்தின் அதிபர் எம்.பாத்திமா பர்ஸானாவின் வழிகாட்டல் மற்றும் நெறிப்படுத்தலிலும் மிகச்சிறப்பாக இடம்பெற்றன.
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர்
திருமதி நபிலா தாரிக், சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னா பாடசாலை அதிபர் ஏ.எம்.அஸ்தர், கிராம உத்தியோகத்தர் எம்.நாஸர், திடீர் மரண வைத்திய அதிகாரி ஏ.எச். அல் ஜவாஹிர், நீர்வழங்கல் சபை உத்தியோகத்தர் எம்.ரிம்ஷான், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.அஸ்வர், சமூக சேவையாளர் எம்.சஜான், ஆசிரியை முஹா சம்ரூத் ஆகியோர் நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறுவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.




Post A Comment:
0 comments so far,add yours