எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கே இளங்குமுதன் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்பில் சுகாதார சுதேச வைத்திய மற்றும் சமூக சேவைகள் நன்னடத்தை சிறுவர் அமைச்சின் செயலாளர் எச் இ. எம் டப்ளியு ஜி திசாநாயக்க தலைமையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் தின வாரம் கிழக்கு மாகாண நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்ன சேகர கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் நூறு வயது கடந்த முதியோர்கள் கிழக்கு மாகாண ஆளுநரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் மாவட்ட முதியோர் சம்மேளன முதியோர்களின் கலாச்சார நிகழ்வுகளும் தொடர்ந்து சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு மற்றும் விசேட தேவையுடைய முதியோர்களுக்கான சக்கர நாற்காலிகள் , பெண் தலைமை தாங்கும் குடும்ப பெண்களுக்கான தையல் இயந்திரங்கள் , முதியோர் இல்லங்களுக்கான கொடுப்பனவு , மாவட்ட முதியோர் சம்மேளன உறுப்பினர்களுக்கான விருதுகள் வழங்கி அறிவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ் .அருள்ராஜ் , மாநகர முதல்வர் சாம் பாக்கியநாதன் பிரதி முதல்வர் வைரமுத்து தினேஷ் மாநகர சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் , சமூக சேவைகள் திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்

.jpeg)


.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours