நவராத்திரி என்பது புரட்டாசி மாத வளர்பிறையின் முதல் நாள் தொடங்கி  நவமி வரை நீடிக்கும் ஒன்பது இரவுகள் கொண்ட ஒரு இந்து சமயப் பண்டிகையாகும்.நவராத்திரி விழாவானது கடந்த 22.09.2025 அன்று ஆரம்பமானதுடன் எதிர்வரும் 02.10.2025 அன்று நிறைவுபெறும் இது அன்னை சக்தியை மையமாகக் கொண்டது, மேலும் இந்த காலகட்டத்தில் வீரம், செல்வம், மற்றும் கல்வி போன்றவற்றை வேண்டி துர்க்கை, லட்சுமி, மற்றும் சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுகின்றனர். இந்த ஒன்பது இரவுகளுக்குப் பிறகு வரும் பத்தாம் நாள் விஜயதசமி என்று அழைக்கப்படுகிறது.இது வெற்றியை குறிக்கிறது. 

அந்தவகையில் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மட்/பட்/சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் இன்று(01) வாணி விழா நிகழ்வுகளானது மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.இந்நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர்.











Share To:

Post A Comment:

0 comments so far,add yours