அம்பாறை
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக
அபேயவிக்கிரம ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி
அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நேற்று முன்தினம்(30) அம்பாறை மாவட்ட
செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய
அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், அஷ்ரஃப் தாஹிர்,
அபூபக்கர் ஆதம்பாவா, கே.கோடிஸ்வரன், மஞ்சுல சுகத் ரத்நாயக,
ஏ.எம்.எம்.எம்.ரத்வத்தே, சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன உள்ளூராட்சி
மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் திணைக்களத் தலைவர்கள் ,
உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.
.jpg)






Post A Comment:
0 comments so far,add yours