மட்டக்களப்பு பாலங்கள் புனரமைப்பு: நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க
மற்றும் பா.உ. கந்தசாமி பிரபுவின் முயற்சியால்
கோரளைப்பற்று வடக்கு பாலங்களின் புனரமைப்புக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம், கோரளைப்பற்று வடக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள உத்துமடு வீதிப் பாலம் மற்றும் கயன்கேணி இறாலோடை வீதிப் பாலம் ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகளுக்காகக் கோரப்பட்ட மேலதிக நிதிக்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டங்களுக்கு ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபாயுடன், மேலதிகமாகத் தேவைப்பட்ட 22 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கந்தசாமி பிரபு அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் தொடர்ச்சியான முயற்சியும், அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் துரிதமான நடவடிக்கையும் இப்பகுதி மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டு வந்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம், பாலங்களின் புனரமைப்புப் பணிகள் விரைவில் நிறைவடைந்து, மக்களின் அன்றாடப் போக்குவரத்து மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முக்கிய கோரிக்கையை நிறைவேற்றித் தந்த அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களுக்கும், இதற்காக அயராது பாடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கந்தசாமி பிரபு அவர்களுக்கும் இப்பிரதேச மக்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours