எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கடந்த 23ஆந்திகதி கொழும்பு பண்டார நாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி சுற்றுச் சூழல் விருது வழங்கும் நிகழ்வில், தேசிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளை வென்ற மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் பாரிய அளவிலான இரும்பு அல்லாத உலோக உற்பத்தி நிறுவனங்களுக்கியைலான போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தினைப் பெற்று தங்க விருதினை சுவீகரித்துக் கொண்ட அல்றா அலுமினியம் தனியார் நிறுவனத்தின் தலைவர் ஏ.எம். உனைஸ் தலைமையிலான குழுவினர் மற்றும், வைத்தியசாலைகளுக்கிடையிலான பிரிவுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டு வெள்ளி விருதினை சுவீகரித்துக் கொண்ட  களுவாஞ்சிக்குடி தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்கடர் கே. புவனேந்திரநாதன் தலைமையிலான குழுவினர்கள்  மாவட்ட அரசாங்க அதிபரினை இன்று (29) மாவட்ட செயலகத்தில் சந்தித்தனர்.

இதன்போது அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், இந்நிறுவனங்கள் சுறுச்சூழல் முகாமைத்துவத்திற்காக மேற்கொண்டுள்ள பொறிமுறைகள் பற்றி கேட்டறிந்ததுடன் இத்திட்டத்திற்காக செயற்பட்ட அனைவரையும் பாராட்டி ஜனாதிபதி விருதினை பெற்றமைக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் இதுபோன்று இம்மாவட்டத்தில் செயற்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், சிறிய மற்றும் பாரிய அளவிலான தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் என்பன சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தினை சரிவரப் பேணவேண்டும் எனவும், இதுபோன்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெறுவதனூடக இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours