நூருல் ஹுதா உமர், யூ.கே. காலித்தீன்

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் தரம் 12 கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் என். முஹம்மட் ஷஹீம் நாஜிஹ் இலங்கை சாரணர் சங்கத்தின் 2025 ம் ஆண்டுக்கான ஜனாதிபதி சாரணர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான ஜனாதிபதி சாரணர் விருது சமூக சேவை செயற்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்திற்கு முன்பாக சிதைவடைந்து காணப்பட்ட பேருந்து நிலையத்தினை கடந்த 30.09.2025ம் திகதி புனர்நிர்மானம் செய்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் கலந்து கொண்டு பேருந்து நிலையத்தை நாடா வெட்டி பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.எம். ரனிஸ், அக்கரைப்பற்று - கல்முனை சாரணர் சங்கத்தின் உதவி மாவட்ட ஆணையாளர் ஐ.எல். முஹம்மட் இப்றாஹீம், காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய அதிபர் எஸ். திருக்குமார், சாரணர் தேசிய பயிற்சிக் குழு உறுப்பினர் கே.எம்.தமீம், ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எச்.எம். ஹாமீம் மற்றும் சிரேஸ்ட, கனிஸ்ட சாரண மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சாரணிய மாணவனின் இவ்வாறான செயற்திட்டங்கள் இனங்களுக்கிடையே சகவாழ்வையும் நல்லுறவை பேணும் செயற்பாடாகும் எனவும் நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாராட்டியதை காணக் கூடியதாக இருந்தது 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours