( வி.ரி.சகாதேவராஜா)
 
ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தியாகி தோழர் க.பத்மநாபாவின் 74 வது அகவை தினம் (கார்த்திகை 19 ) பெரிய நீலாவணையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது .

இந் நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

 இந் நிகழ்வு காரைதீவு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்  எஸ் .நேசராஜா  தலைமையில் நடைபெற்றது .

நிகழ்வில் பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் ஸ்தாபக தலைவர் தோழர் ஜோதி(சோலையூரான்)  கலந்து கொண்டதுடன் சிறப்புரையும் வழங்கினார் .

மூத்த தோழர்களான பெர்னாண்டோ, சிராஃப் , நகுலன்,பாஸ்கரன்,கோபன்,வாசு மற்றும் வரதன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

 அத்துடன் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மாணவர்களும் கலந்துகொண்டனர். 

இன் நிகழ்வு தோழர் பத்மநாபா சேவை ஒன்றியத்தின் ஸ்தாபக தலைவர் தோழர் லவனின் வழிகாட்டல்களுக்கு அமைய சிறப்பான முறையில் நடைபெற்றது.புலம்பெயர் தோழர்கள் இவ் வைபவத்திற்ற்கான அனுசரணையினை வழங்கியிருந்தார்கள்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours