இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. 

இன்று காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கம் காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தயவுசெய்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours