மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மகிளூர்முனையினை சேர்ந்த செல்வன் சுந்தரலிங்கம் விதுசன் அவர்களுடைய இரண்டு நூல்கள்  2025.11.24 திங்கட்கிழமை   மகிளூர்முனை 110B பல்தேவைக்கட்டிட மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் "விரதங்களும் பாடல்களும்" மற்றும் "மரண வீட்டில் இசை"  என இரு நூல் வெளியீடுகள் இடம்பெற்றது. இந்நூல் வெளியீட்டு நிகழ்வானது கஜமுகன் முதியோர் சங்க தலைவர் கணபதிப்பிள்ளை கிருபைராசா  தலைமையில் இடம்பெற்றது. 

ஆசியுரையினை வணக்கத்திற்குரிய சிவஶ்ரீ சண்முக மயூரவதனன் குருக்கள்   வழங்கியிருந்தார். இந்நூல் வெளியீட்டு விழாவில் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர்  அ.மனோகரன்  மண்முனை தென் எருவில் பற்று கலாசார உத்தியோகத்தர் திருமதி பத்ம  கௌரி மயூரவதனன்  கிராம உத்தியோகத்தர் சண்முகநாதன் தேவதாஸ் ஓய்வுநிலை அதிபர் கலாபூசணம் நாராயணபிள்ளை நாகேந்திரன் , ஓய்வுநிலை பிரதி விவசாய பணிப்பாளர்  க. நவேந்திரன்  , புலவர் கலைமாமணி மாணிக்கவாசகம் புருஷோத்தமன் , கவிவாணர் மார்க்கண்டு சுந்தரலிங்கம் ஆசிரியர்   ஆலய பரிபாலன சபையினர்,  கழகங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு இந்நூல் வெளியீட்டு விழாவை சிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours