(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் கீழ் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் ஆலம் குளம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 7மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை கட்டிட திறப்பு விழா (19) புதன்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ. அப்கர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த பியதிஸ்ஸ பிரதம அதிதியாகவும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா சிறப்பு அதிதியாகவும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள், பிரதியமைச்சரின் இணைப்பாளர், அட்டளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours