(சுமன்)
நாட்டில் நிலவிய அசாதராண சூழ்நிலையால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு களுவங்கேணி பிரதேசத்தில் குறித்த நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்களின் ஒன்றியம் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் குறித்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
களுவங்கேணி பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு இன்றைய தினம் குறித்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சுவிஸ்வாழ் உறவுகளினால் வழங்கப்பட்ட நிதி உதவியின் மூலம் குறித்த உதவி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Post A Comment:
0 comments so far,add yours