அம்பாறை மாவட்ட பிரதேச மக்களின் நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக Qatar Charity யின் இலங்கைக்கான பணிப்பாளருடன் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா இன்று (19) வெள்ளிக்கிழமை கொழும்பில் சினேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இதன் போது தொடர்ச்சியாக அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் எகெட் (EHED) வீட்டுத் திட்டத்திற்கான தீர்வு, நிந்தவூரில் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் பிரதான வீதியில் காணப்படும் வைத்தியசாலையின் கட்டுமானம், பிராந்தியத்திற்கான ஒருங்கிணைந்த திண்மக் கழிவு முகாமைத்துவம், வீடற்றவர்களுக்கான வீட்டுத்திட்டம் அத்துடன் சமகால அனர்த்தத்தை முகங்கொடுக்கும் வழிமுறைகள் சம்மந்தமாகவும் மேலும் கல்முனை மாநகர சபையை பௌதீக ரீதியில் எவ்வாறு வலுவூட்டல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours