(பதுளையிலிருந்து வி.ரி .சகாதேவராஜா)
அவுஸ்திரேலிய
காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) , பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட
பதுளை மற்றும் பசறை மடுல்சீம பட்டவத்தை வேவத்த மாணவர்களுக்கு கற்றல்
உபகரணங்களை நேற்று முன்தினம் (17) வழங்கி வைத்தது.
இந்நிகழ்வு பதுளை மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலை) அதிபர் கே.கனகேந்திரன் தலைமையில் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது .
கூடவே
இணைப்பாளர் ஆசிரியர் ஜே.எம்.வின்சன்ற் மற்றும் பசறை தமிழ் மகா வித்தியாலய
அதிபர் பி.சித்தார்த்தன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
ஒஸ்காரின்
உறுப்பினர்களான காரைதீவு மக்கள் இதற்காக பூரண அனுசரணையை வழங்கியிருந்தனர்.
ஒஸ்காரின் சிரேஸ்ட உறுப்பினர் ஆர்.பிரதீபராஜ் அங்கிருந்து இந்த
செயற்றிட்டத்திற்கு இணைப்பாளராக செயற்பட்டார்.
ஒஸ்கார்
தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையிலான குழுவினரின் பூரண ஒத்துழைப்பில்
பேரிடர் நிவாரண திட்டம் முதற்கட்டமாக பொலனறுவை கல்எல கிராமத்திற்கும் ,
பின்னர் பெருந்தொகை நிவாரணம் மலையகத்தின் மகியங்கன கண்டி கம்பளை பூண்டுலோயா
பதுளை பசறை போன்ற நாலா பக்கங்களிலும் வழங்கி வைக்கப்பட்டன.
ஒஸ்கார்
அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர்
வி.ரி. சகாதேவராஜா தலைமையிலான குழுவினர் அவற்றை வழங்கி வைத்தனர்.
ஒஸ்கார்
சார்பில் வி.ஜெயச்சந்திரன், வி.தஸானந்த், என். அமரீசன் மற்றும் ஓய்வு
நிலை அதிபர் பூ.நவரெத்தினராஜா ஆகியோர் தொண்டர்களாக கலந்து கொண்டனர்.
அங்குள்ள மக்கள், காரைதீவு மக்களுக்கு நன்றி கூறினர்.





Post A Comment:
0 comments so far,add yours