(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நிவாரணம் சேகரிக்கும் பணியானது சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, (02) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் சாய்ந்தமருது - மாளிகைகாடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாரக் தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில், மூன்றாவது நாளான இன்றும் நிவாரணம் அறவிடும் பணிகள் குறித்த பொது அமைப்புகளினால் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இந்த உயரிய பணியில் உங்களுடைய காத்திரமான பங்களிப்புகளை வழங்கி உதவி செய்ய விரும்பினால், கீழ் குறிப்பிடப்படும் அமானா வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு உதவிகளை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் 2025.12.01 ஆம் திகதி பள்ளிவாசலில் கூட்டப்பட்ட அனைத்துப் பள்ளிவாசல் தலைவர்கள், ஜம்இய்யத்துல் உலமா, வர்த்தக சங்கம், ஜனாஸா நலன்புரி சங்கம் மற்றும் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக நூற்றுக்கு மேற்பட்டவர்களின் பங்குபற்றுதலுடன் கூட்டப்பட்ட கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக, வெளிமாவட்டங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் நிதியை வைப்பிலிடுதல் சம்பந்தமாக ஆராயப்பட்டது.
இதன்போது இப்பணியானது பல்வேறுபட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் காரணமாக பள்ளிவாசல் வங்கிக் கணக்கிலன்றி. பிரத்தியேகமான வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிப்பதென சபையோரினால் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இதன்பிரகாரம் ஜம்இய்யத்துல் உலமா சபை, சாய்ந்தமருது-மாளிகைக்காடு கிளையின் தலைவரின் பெயரில் புதிதாக
Meeramohaideen Meerasahibu
A/C No 0220601531001
Amana Bank
Kalmunai





Post A Comment:
0 comments so far,add yours