எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு ஐரோப்பிய தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வுகளை  (17) மேற்கொண்டனர்.

நாடளாவிய ரீதியில்  வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதான பாலங்களை ஆய்வு செய்வதற்கு நப்லஸ் பல்கழைக்க பேராசிரியர் லூயி டி சார்நோ அடங்களான ஐரோப்பிய ஒன்றிய தொழில்  நுட்ப  நிபுணர் குழுவினர்  ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதன் போது நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய உபகரணங்கள் மூலம் பகுப்பாய்வுகளை மேற்கொண்டு  தொழில் நுட்ப ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்கவுள்ளனர்.

இந் நிகழ்வில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த  பிரான்சிஸ்கோ ஜீஒரீஅநோ , பௌலோ புற்றிநோ,
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் ஏ.எம். சி.ரி அத்தநாயக்க, பிரதம பொறியியலாளர் எஸ். கலாதரன், கிழக்கு மாகாண பாலங்கள் பராமரிப்பு மற்றும் நிர்வாக பொறியியலாளர் எம்.ஏ.வாதுலன், கிழக்கு மாகாண பாலங்கள் வடிவமைப்பு பொறியியலாளர் கே.வில்வராசன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாலங்கள் பராமரிப்பு நிர்வாக பொறியாளர் ரீ.ராமச்சந்திரன்,  மாவட்ட அனர்த்த நிவார சேவை உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours