(சுமன்)


நாட்டில் இடம்பெற்ற பேரிடரால் அதிக பாதிப்புற்ற மலையகப் பகுதிக்கு நிவாரணங்கள் வழங்கும் முகமாக மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தினால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் இன்றைய தினம் (06) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

டித்வா புயல் காரணமாக நாட்டில் நிலவிய பேரனர்த்தத்திற்கு உதவும் முகமாக ஆனைப்பந்தி ஆலய பரிபாலன நிருவாக சபையினால் ஆலய நிதியிலிருந்து ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பக்த அடியவர்களிடமிருந்தும் நன்கொடைகள், பொருட்கள் சேகரிக்கப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில் ஆலய நிருவாக சபையினால் சேகரிக்கப்பட்ட அரிசி 10 கிலோ 170 மூடைகளும், கோதுமை மா 05 கிலோ 400 மூடைகளும் சேகரிக்கப்பட்டு இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

ஆலய பரிபாலனசபைத் தலைவர் சி.மங்களராஜன், இணைச்செயலாளர் சோ.சந்திரகுமார், பொருளார் த.பிரசாத், பஞ்சாய உறுப்பினர்களான தே.மயுரன், வீ.தேவதாஸ் மற்றும் பா.பிரணவன் உட்பட நிருவாக சபை உறுப்பினர்கள் சகிதம் குறித்த பொருட்கள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் மற்றும் மேலதிக அரசாங்க சுதர்சினி சிறிகாந் ஆகியோர் முன்னிலையில் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours