களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் நேற்றிரவு (14) இடம்பெற்ற விபத்தில் 29 வயதுடைய உதயகுமார் சுரேந் எனும் இளைஞர்  உயிரிழந்துள்ளார்.

துறைநீலாவணை பிரதான வீதியில் நேற்றிரவு (14.01.2026)ஆம் திகதி இரவு 10.35 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் துறைநீலாவணையைச் சேர்ந்த 29வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

துறைநீலாவணையிலுள்ள தனது தாயாரின் வீட்டிலிருந்து தான் திருமணம் முடித்துள்ள துரைவந்திய மேடு பகுதிக்கு மோட்டார்சைக்கிள் பயணித்த போதே வீதியில் நின்றிருந்த கட்டாக்காலி மாட்டுடன்  மோதி விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார் 

இப் பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்து வருவதால் தொடர்ந்து போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

குறித்த விபத்தில் சிக்கிய மாடும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


(ரஞ்சன்)


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours