நாடளாவிய ரீதியில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது இன்று(29)மட்/பட்/சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் தி.புவனேசராசா தலைமையில் படசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முதலாம் தர மாணவர்கள் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
மேற்படி நிகழ்விற்கு பட்டிருப்பு வலயகல்வி அலுவலக பிரதிநிதியாக சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் கே. யமுனாகரன்,கிராமசேவை உத்தியோகத்தர்கெ.கேணுதாஸ்,முன் பள்ளி ஆசிரியர் நா.சந்திரா,ஆசிரியர்கள்,பெற்றோ ர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.











Post A Comment:
0 comments so far,add yours