(வி.ரி. சகாதேவராஜா)
உழவர்
திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலகத்தின்
ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் தலைமையில் பொங்கல் திருவிழா
நேற்று (28) புதன்கிழமை கோலாகலமாக இடம்பெற்றது.
கலை
கலாசார பாரம்பரிய அறுவடை ,புதிர் எடுத்தல் ,நெல் குற்றி புத்தரிசி எடுத்து
பொங்கல் வைக்கும் நிகழ்வுகள் பிரதம அதிதியான அம்பாறை மாவட்ட மேலதிக
அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜன் முன்னிலையில் நடைபெற்றது.
உழவர்
கண்காட்சி மற்றும் பாடசாலை மாணவர்களினால் கலை கலாசார பண்பாட்டு
விழுமியங்களை பறைசாற்றும் வண்ணம் நடனங்கள் , என பற்பல நிகழ்வுகள்
இடம்பெற்றிருந்தது.
அதிதிகளாக
உதவி பிரதேச செயலாளர் எஸ்.பிரணவரூபன், கண்ணகி அம்மன் ஆலய தர்மகர்த்தா
எஸ்.நமசிவாயம், ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி
வி.ரி. சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகள் அனைவருக்கும் தமிழர் மாண்பை
எடுத்தியம்பும் விதமாக நினைவு சின்னங்கள் மற்றும் நவ தானியங்கள் அடங்கிய
பொற்கிழிகள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.








Post A Comment:
0 comments so far,add yours