- யூ.கே. காலித்தீன் -

சாய்ந்தமருது கமு/ரியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா!

2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைகளில் வரவேற்க்கும் நிகழ்வு  நேற்று (29)ல் வெகுவிமர்சையாக நடைபெற்றது .

“வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை பெற்றுக் கொடுப்பதே" எனும் கருப்பொருளில் ஆரம்பமான விழாவானது புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு  குறிப்பிட்டுள்ளது.  

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளரும், கல்முனை வலயக் கல்வி பிரதி பணிப்பாளருமான (ICT) திருமதி ஏ. அஸ்மா மலிக் கலந்து கொண்டார்கள்.

பாடசாலை அதிபர் எம்.எஸ். அஸ்தர்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலய விஷேட கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.சியாம், கல்லூரியின் நிறைவேற்றுக் அபிவிருத்தி குழு உறுப்பினரும், பழைய மாணவ சங்கத்தின் செயலாளருமான யூ.கே. காலித்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அகர முதல் எழுத்தினை மாணவர்களுக்கு எழுதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மிகச்சிறப்பாக நடைபெற்ற இத்நிகழ்வுக்காக உழைத்த பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்குழாம், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours