சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் நிர்வாகசபைக் கூட்டம் சுவிஸ் நாட்டில் பேண் நகரில் அமைப்பின் அலுவலகத்தில் சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் கே.தியாகராஜா தலைமையில் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இவ்வருடம் இடம்பெற இருக்கும் தைப்பொங்கல் விழா மற்றும் அமைப்பின் 21 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் சிறப்பாக நடாத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்;ள வேண்டும்
அதே வேளை கிழக்கு காரியாலயத்திற்கு கிடைக்கப்பெற்ற உதவி கோரிய கடிதங்களைப் பரிசிலித்து தகுதியானவர்களுக்கான உதவிகளை வழங்குதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கு கூட்டத்திற்கு சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் தொழிலதிபர் சமூகசேவகர் க.துரைநாயகம் உதவிப் பொருளாளர் வி.பேரின்பராஜா நிருவாக சபை உறுப்பினர்களான என்.விஜயகுமார் கே.கிருபானந் எஸ்.தரிசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்



Post A Comment:
0 comments so far,add yours