(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

வறுமையொழிப்பு பிரஜாசக்தி 2026 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 503 கிராமசேவகர் பிரிவுகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 430 பயனாளிகளுக்கான வீடுகள் ஒவ்வொன்றும் 10 இலட்சம் பெறுமதியான வீடுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு அம்பாறை பிரதேச செயலகத்தில் இன்று (26) புதன்கிழமை  நடைபெற்றது.

இந் நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி சமூகவலுவூட்டல் சமூகப்பாதுகாப்பு பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ, கரையோரப்பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல ரத்நாயக்க, பிரியந்த  விஜேரத்ன ஆகியோருடன் அம்பாறை மாவட்ட செயலாளர் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours