2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் போது நிந்தவூருக்கான கலாசார மண்டப கட்டிடத்தினை நிறைவு செய்வதற்காக 300 மில்லியன் ரூபாய் பணம் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் வேண்டுகோளுக்கமைய ஒதுக்கப்பட்டிருந்தது.
இதன் தொடக்க கட்டமாக நிதி ஆணையம் மூலம் கிழக்கு மாகாண தலைமைச் செயலாளருக்கு திறைசேரி துணைச் செயலாளரினால் 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுத் தொகை வழங்கப்பட்டது. இதற்காக நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
இவ்வேலைத்திட்டமானது மிக விரைவில் பூர்த்தி செய்யப்பட்டு, மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours