(சுமன்)



மட்டக்களப்பு சித்தாண்டி சமூக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் இன்றைய தினம் 31.01.2026 சனிக்கிழமை சித்தாண்டி சமூக ஒன்றியத் தலைவர் திரு.ந.சதீஸ்கண்ணா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது முதலில் சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்று ஆலயத்தில் இருந்து சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் வரை அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு கலை கலாசார நிகழ்வு சகிதம் அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், அதிதிகள் பொங்கலுக்கான அரிசி இடல் இடம்பெற்று, வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை, கலை கலாசார நிகழ்வுகள், சாதனையாளர் கௌரவிப்பு, அதிதிகள் உரை, நன்றியுரை, தமிழ் மொழி வாழ்த்து பாடப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், இரா.சாணக்கியன், ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மு.முரளிதரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சி.வவானந்தன், த.பிரபாகரன், திரு.நாகேந்திரன், திரு.பிரினட்குணபாலன், அரச உயரதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சித்தாண்டி சமூக ஒன்றிய உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்







.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours