சிறந்த மனித விழுமியங்களை வளர்ப்பதன் ஊடாக பொதுமக்களுக்கான மேம்பட்ட சேவையை
வழங்குதல்" தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
திருகோணமலை மாவட்ட ஓய்வு நிலை மேலதிக அரசாங்க அதிபர் என்.புவனேந்திரன் அவர்களினால் சிறந்த மனித விழுமியங்களை வளர்த்துக்கொள்வதனூடாக பொதுமக்களுக்கு
கண்ணியமான அரச சேவையினை வழங்குவதல் தொடர்பாக வளவான்மை மேற்கொண்டார்.
இதன் போது தற்போதைய நவீன உலகில் சமூகத்தின் மாற்றம் மக்களின் மனவெழுச்சி அவர்களின் பிரச்சினைகள் மற்றும் உணர்வுகளை புரிந்து கொண்டு தீர்வு காணும் அணுகுமுறை தொடர்பாகவும் அறிஞர்களின் கருத்துக்களை சுட்டிக்காட்டி தெளிவூட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதம பொறியியலாளர்
ரீ.சுமன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ். சசிகரன், பிரதேச செயலாளர்கள்,
திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.




Post A Comment:
0 comments so far,add yours