( காரைதீவு சகா)

உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் ஆகியோரது திருவுருவச்சிலைகள் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் (ஒஸ்கார் – AusKar) ஏற்பாட்டில் பூண்டுலோயாவில் இன்று 07 ஆம் திகதி சனிக்கிழமை 
பூண்டுலோயாவில் இருபெ

ஒஸ்காரின் மங்கள இசை முழங்க,
மலையக மண்ணில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் மலர்ந்தது.


இச் சிலைகள் மத்திய மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவிலே பூண்டுலோயா விவேகானந்த மகாவித்தியாலயத்தில் இன்று அதிபர் ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் மற்றும் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் ஆகியோர் சிலைகளை திறந்து வைத்தனர்.

ஒஸ்கார் சார்பில் தாயக இணைப்பாளர் ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா நட்சத்திர அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் பல அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
ஒஸ்காரின் துறவியர் படிவமலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலாசிரியர் வி.ரி.சகாதேவராஜா முதற் பிரதிகளை சுவாமிகளுக்கு வழங்கி வைத்தார்.


ஒஸ்காரின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் நிதி அனுசரணையில் மக்களுக்கும் ஆசிரியைகளுக்கும் புது வஸ்திரங்கள் வழங்கப்பட்டன.
ஒஸ்காரின் ஏற்பாட்டில் அன்னதானம் இடம் பெற்றது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours