(ரஞ்சன்)

​இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையில்  (04.02.2026) ஆம் திகதி உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

பிரதேச சபை செயலாளர் எஸ். பகீரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசியக் கொடி ஏற்றப்பட்டு நாட்டின் அமைதி மற்றும் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட உறுதிபூணப்பட்டது.

சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில், பிரதேச சபை வளாகத்தில் 

செயலாளர் அவர்களால் முதலாவது மரக்கன்று நட்டி வைக்கப்பட்டன.

நிகழ்வின் போது பிரதேச சபையின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours